Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செம்பு விலை உயர்வு - மின்சாதனப் பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு

செம்பு விலை உயர்வு - மின்சாதனப் பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு

ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, மோட்டார், மின்கம்பி, சுவிட்ச்கியர் உள்ளிட்ட மின்சாரப் பொருட்களில் செம்பு முக்கிய மூலப்பொருளாகும்.

பகிரவும் WhatsApp Facebook

செம்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏசி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்று ஈரோடு ஏசி மெக்கானிக் நலச்சங்கத் தலைவர் எம்எம்.ஹர்ஷத் தெரிவித்துள்ளார்.

ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, மோட்டார், மின்கம்பி, சுவிட்ச்கியர் உள்ளிட்ட மின்சாரப் பொருட்களில் செம்பு முக்கிய மூலப்பொருளாகும். 


கடந்த ஒரு ஆண்டில் செம்பு விலை சுமார் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினமும் எல்எம்இ (லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்) சந்தையில் செம்பு டன்னுக்கு சுமார் 14,590 முதல் 14,636 அமெரிக்க டாலர் என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. இந்தியாவில் கேபிள் விலையும் ஏற்கனவே சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஈரோடு ஏசி மெக்கானிக் நலச்சங்கத் தலைவர் எம்எம் ஹர்ஷத் கூறியதாவது: விலை உயர்வால், பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து சில்லறை விலையிலும் செம்பு அதிகரித்துள்ளது. இத்துடன் ஏசி பழுதுபார்ப்பு செலவும் அதிகரிக்கும். ஈரோட்டில், ஸ்பிளிட் ஏசிக்கு கூடுதல் செம்புக் குழாய் பணிக்கு அடிக்கு சுமார் ரூ.350 வசூலிக்கப்படுகிறது.

 ஏசி செம்பு காயில்களின் விலை கொள்ளளவு மற்றும் வகையைப் பொறுத்து ரூ.1,500–ரூ.5,000 வரை உள்ளது.

செம்பு விலை உயர்ந்த நிலையிலேயே தொடர்ந்தால், உற்பத்தியாளர்களும் சேவை வழங்குபவர்களும் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். வரும் மாதங்களில் ஏசி வாங்கவோ மின்சாரப் பணிகள் செய்யவோ திட்டமிடும் நுகர்வோர் அதிக செலவை எதிர்கொள்ள நேரிடலாம் இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
பிரேசிலில் பரவும் காட்டுத் தீ! அதிகரிக்கும் காற்று மாசு
அடுத்த செய்தி
உச்சத்தை தொட்ட தொழிற்சாலை பணவீக்கம் - என்ன காரணம்?

தொடர்புடைய செய்திகள்